‘மொத்தக் கனவையும் மொத பந்துலயே முடிச்சுட்டாய்ங்க!’.. ‘அதுவும் டீம்ல இருந்து வெளிய போனவர வெச்சு கொடுத்த ட்விஸ்ட்!’
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் முதல் பந்திலேயே மும்பை இந்தியன்ஸ் அதிரவைத்தது. டெல்லி அணி டாஸில் வென்றதை அடுத்து, முதலில் டெல்லி பேட் செய்ய, பந்து வீசிய மும்பை அணியின் முதல் பந்திலேயே டெல்லி அணியின் துவக்க வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை வீழ்த்தியது டெல்லி.

இதனால் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் முக்கிய திட்டம் எடுத்த எடுப்பிலயே காலி ஆனது. முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தால் மும்பை அணி தடுமாறும் என்பதால் அந்த டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணியில் சரியான துவக்க வீரர்கள் அமையாததால் தவானுடன் யாரை பேட்டிங் ஆட வைக்கலாம் என பிளே-ஆஃப் சுற்று வரை குழப்பம் இருந்தது. ஆனால் ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் துவக்க வீரராக அதிரடி காட்டியதால், அவர் டெல்லி அணியை வெற்றி பெற வைப்பார் என அவருக்கு பில்டப் கொடுக்கப்பட்டு நம்பப் பட்டது.
ட்ரென்ட் போல்ட்டை சமாளிக்க மார்கஸ் ஸ்டோய்னிஸ் தான் சரியான பேட்ஸ்மேன் எனவும் கூறப்பட்டது. அத்துடன் ட்ரென்ட் போல்ட் காயத்தில் இருந்ததால் இறுதிப் போட்டியில் சரியாக பந்து வீசுவாரா? என்ற குழப்பம் கூட இருந்தது. ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்டாக, ரஹானே 2 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் வீசிய மூன்றாவது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் டெல்லி அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. போல்ட், முன்னதாக டெல்லி அணிக்காக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோர் ஜோடி சீராக ஆட, ரிஷாப் பண்ட் 35 பந்துகளில் தனது அரைசதத்தை அடித்து, 56 (38) ரன்களில் கேட்ச் ஆனார். ஸ்ரேயாஸ் அய்யரும் தனது அரை சதத்தை பதிவு செய்து 65(50) ரன்கள் எடுத்தார். ஹெட்மயர் 5(5) ரன்களும், அக்ஷர் பட்டேல் 9(9) ரன்களும், ரபாடா (0) ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களே டெல்லி அணி எடுத்திருந்தது.
இதனை அடுத்து 157 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ரோஹித் ஷர்மா 51 பந்துகளுக்கு 68 ரன்களும், இஷான் கிஷான் 19 பந்துகளுக்கு 33 ரன்களும் டி காக் 12 பந்துகளுக்கு 20 ரன்களும் எடுத்தனர். இவர்களை தவிர, ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணல் பாண்ட்யா இருவரும் ஆடினர். இறுதியாக 18.4 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்து மும்பை அணி வென்றதுடன் ஐபிஎல் 13வது சீசனில் வென்று 5வது முறையாக IPL சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முன்னதாக 2013, 2015, 2017, 2019 & 2020 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று மும்பை சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
