VIDEO: அப்படியே விராட் கோலி மாதிரியே பண்றாரே.. யாருப்பா இந்த பையன்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதும் லக்னோ அணியின் இளம் வீரர் ஒருவர் விராட் கோலி போல் வெற்றியை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ரிஷ்ப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டெல்லி அணியின் பிரீத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இதில் வார்னர் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த ரோவ்மேன் பவல் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்த பிரீத்வி ஷா அதிரடியாக விளையாடினார். அப்போது கிருஷ்ணப்பா கௌதம் வீசிய ஓவரில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து பிரீத்வி ஷா (61 ரன்கள்) ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய சர்பராஸ் கான் (36 ரன்கள்), ரிஷப் பந்துடன் (39 ரன்கள்) ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை டெல்லி அணி எடுத்தது. லக்னோ அணியைப் பொறுத்தவரை ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளும், கிருஷ்ணப்பா கௌதம் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ அணி, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டி காக் 80 ரன்கள் எடுத்தார். அதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இப்போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரர் ஆயுஷ் படோனி, விராட் கோலி கொண்டாடியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் லக்னோ அணி இருந்தது. அப்போது களமிறங்கிய ஆயுஷ் படோனி, ஒரு சிக்சர், பவுண்டரி விளாசி அணியை வெற்றிபெற வைத்தார்.
VIRAT KOHLI INFLUENCE ON YOUNGER GENERATION. #AyushBadoni #IPL2022 #ViratKohli𓃵 pic.twitter.com/GdadsAFIXV
— Hemant Singh (@hemant18326) April 8, 2022
இதனை அடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி போல் முதுகில் தட்டி ஆக்ரோசமாக வெற்றியைக் கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
