"நான் சிவேனன்னு தானே டா இருந்தேன்.." 'மீம்ஸ்'களாக பறக்கும் 'க்ருணால்' பாண்டியாவின் புகைப்படம்... 'காரணம்' என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Oct 07, 2020 01:12 PM

நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருந்தது.

krunal pandya\'s face against rajasthan royals gone viral

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 79 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் பட்லரை தவிர மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

ராஜஸ்தான் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி பெற்ற நிலையில், மும்பை அணி வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

 

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சரின் பந்து வீச்சு வேகம், பொல்லார்ட் பிடித்த அசத்தல் கேட்ச் என பல விஷயங்கள் ட்ரெண்ட் ஆன நிலையில், மும்பை அணியின் க்ருணால் பாண்டியாவின் புகைப்படம் ஒன்றும் அதிகம் வைரலாகி வருகிறது. 

 

மும்பை அணிக்காக அவர் பேட்டிங் செய்த போது, பார்ப்பதற்கு சற்று வெறுப்பில் இருந்தது போல ஒரு நொடி தெரிந்த நிலையில் அந்த புகைப்படம் தொடர்பாக பல மீம்ஸ்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Krunal pandya's face against rajasthan royals gone viral | Sports News.