‘விமர்சனம் பண்ணியதுனால மாத்தல’... ‘மாற்றப்பட்ட இளம் வீரர்’... ‘வெளியான உண்மையான காரணம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மணீஷ் பாண்டே அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் வெளியாகி உள்ளது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றார். அந்த தொடரில் அவர் சொற்ப ரன்களே எடுத்ததால், அவரை முதல் டி20 போட்டியில் அணியில் இருந்து நீக்கி இருந்தார் கேப்டன் விராட் கோலி.
அவருக்கு பதில் மணீஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரை ஆட வைக்காதது குறித்து விவாதம் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் வெடித்தது. கேப்டன் விராட் கோலி இஷ்டத்திற்கு அணியை மாற்றி வீரர்களின் நம்பிக்கையை உடைப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது.
வீரேந்திர சேவாக், முகமது கைஃப் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இது பற்றி பெரிய அளவில் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், 2-வது டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். மணீஷ் பாண்டே அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். இதற்கு விராட் கோலி மீதான விமர்சனம் தான் காரணம் என பேசப்பட்டது.
தற்போது இந்த மாற்றத்துக்கான உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது. மணீஷ் பாண்டேவுக்கு முட்டியில் வலி இருப்பதால் அவர் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால், விமர்சனத்தை கண்டு ஸ்ரேயாஸ் ஐயருக்கு, விராட் கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்தப் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாக்குர் அணியில் இடம் பிடித்தார். காயத்தால் தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜடேஜாவுக்கு பதில் சாஹல் அணியில் இடம் பிடித்தார்.