"என்ன ஜோக் காட்டுறீங்களா??.." சேவாக் சொன்னத கேட்டு சிரிச்ச வார்னர்.. "ஆனா, இன்னைக்கி கதையே வேற.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில் பாதிக்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளதால், இனி வரும் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெறும் அணிகள் தான், பிளே ஆப் சுற்று வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது.
இதனால், ஒவ்வொரு போட்டிகளும் நிச்சயம் முழுக்க விறுவிறுப்புடன் தான் போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடப்பு தொடரில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இந்த முறை ஏலத்தில் எடுத்திருந்தது.
அதிரடி ஃபார்மில் வார்னர்
கடந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வந்த டேவிட் வார்னரின் கேப்டன் பதவி போய், பின்னர் அணியிலும் பெரிதாக அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால், இந்த முறை டெல்லி அணிக்காக ஆடி வரும் டேவிட் வார்னர், இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில், 3 அரை சதங்களுடன் 261 ரன்கள் சேர்த்துள்ளார்.
இதனால், ஐபிஎல் தொடரில் தன் மீது உருவான விமர்சனங்களுக்கும் வார்னர் பதிலடியைக் கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் மட்டுமில்லாமல், சர்வதேச போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பான ஃபார்மில் உள்ளார் வார்னர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், டேவிட் வார்னர் குறித்து அசத்தல் கருத்து ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.
"என்ன ஜோக்கு காட்டுறீங்களா?"
2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடி வரும் வார்னர், முதல் முறையாக டெல்லி அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது, அவருடன் சேவாக்கும் டெல்லி அணியில் இணைந்து ஆடி இருந்தார்.
அந்த சமயத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி பேசிய சேவாக், "டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆட வார்னர் வந்த போது, அவர் டெஸ்ட் போட்டிகளில் அதற்கு முன்பு ஆடியது கிடையாது. அந்த சமயத்தில், அவருடைய ஆட்டத்தை பார்த்து, 'நீங்கள் டி 20 மட்டுமில்லாது, சிறந்த டெஸ்ட் வீரராகவும் வர முடியும்' என நான் கூறினேன். அதற்கு வார்னரோ, 'நீங்கள் ஜோக் செய்கிறீர்கள்' என கூறினார்.
கரெக்ட்டாக கணித்த சேவாக்
அதன் பிறகு அவரிடம், 'டி 20 போட்டிகளில் 6 ஓவர்கள் தான் பவர் பிளே உள்ளது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாள் முழுவதும் பவர் பிளே மாதிரி தான். உங்களின் ஆட்டத்தை வைத்து பார்க்கும் போது, நீங்கள் டெஸ்ட் போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்' என கூறினேன். இப்போது அவரை பாருங்கள். ஒரு சிறந்த டெஸ்ட் பிளேயராக உள்ளார்" என சேவாக் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு, டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வார்னர், ஆஸ்திரேலிய அணியின் சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக மட்டுமில்லாமல், உலக அரங்கிலும் சிறந்த டெஸ்ட் வீரராக திகழ்ந்து வருகிறார். ஆனால், வார்னர் டெஸ்ட்டில் அறிமுகமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, சேவாக் அதனை சரியாக கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8