"முரளிதரன் இப்படி கோவப்பட்டு பாத்ததே இல்ல.." கடுப்பில் கத்திய ஜாம்பவான்.. பரபரப்பு பின்னணி..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில், கடைசி வரை மேட்ச் செல்ல, இறுதி பந்து தான் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியில், அபிஷேக் ஷர்மா மற்றும் மார்க்ரம் ஆகியோர், சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.
அபிஷேக் ஷர்மா 65 ரன்களும், மார்க்ரம் 56 ரன்களும் எடுத்து அவுட்டாக, கடைசியில் களமிறங்கிய சஷாங்க் சிங், 6 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியும், ஆரம்பத்தில் இருந்தே அதிரடியுடன் ஆடி ரன் எடுக்கத் தொடங்கியது. தொடக்க வீரர் சஹா 38 பந்துகளில், 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 68 ரன்கள் எடுத்தார். இதன் பின்னர், டெவாட்டியாவும் கடைசி சமயத்தில் அதிரடி காட்டினார்.
கடைசி பந்து வரை திக் திக்..
கடைசி ஓவரில், குஜராத் அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது டெவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் களத்தில் இருந்தனர். இறுதி ஓவரை மார்கோ ஜென்சன் வீச, முதல் பந்தினை சிக்சருக்கு அனுப்பினார் டெவாட்டியா. தொடர்ந்து, கடைசி 4 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ரஷீத் கான் தனது பங்கிற்கு சிக்ஸர் ஒன்றை அனுப்பினார். தொடர்ந்து, கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு ரஷீத் அனுப்ப, யாரும் நினைத்து பார்க்க முடியாத வகையில் போட்டியை முடித்து வைத்தார்.
SRH ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..
கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற போதும், அசத்தலாக ஆடி 4 சிக்ஸர்களை பறக்க விட்டு, வெற்றியை சொந்தமாக்கி கொண்டது, ரஷீத் - டெவாட்டியா ஜோடி. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், ஒரே ஓவரில் டு பிளெஸ்ஸிஸ், கோலி மற்றும் அனுஜ் ராவத் விக்கெட்டை எடுத்த ஜென்சன், இன்று 22 ரன்களை அள்ளிக் கொடுத்தது, SRH ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
கடுப்பில் கத்திய முரளிதரன்
இந்நிலையில், கடைசி ஓவரின் போது, ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரும், சுழற்பந்து வீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் கோபப்பட்ட சம்பவம், அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை ஃபுல் டாஸாக ஜென்சன் வீசினார். இதனை சிக்சருக்கு அனுப்பினார் ரஷீத். இதனால், கடைசி பந்தில், குஜராத் வெற்றிக்கு 3 ரன்கள் வேண்டும் என்ற நிலை உருவானது.
அப்போது, வெளியே இருந்த முரளிதரன், ஏன் ஜென்சன் ஃபுல் டாஸ் பந்தினை வீசுகிறார் என்பதை குறிப்பிட்டு கத்தி உள்ளதாக தெரிகிறது. முரளிதரன் இப்படி கோபப்பட்டு நிச்சயம் ரசிகர்கள் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு வீரர், இளம் வீரரின் பந்து வீச்சால் கடுப்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Murali getting Angry during the 20 th over pic.twitter.com/jvcjVh4Kpp
— Kaveen Wijerathna (@CricCrazyKaveen) April 27, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்..https://behindwoods.com/bgm8 https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
