"அட, இது அவங்களோட GIRL FRIEND தானா?.." கேமராவில் அடிக்கடி பட்ட முகம்.. இணையத்தில் வைரல் ஆக்கிய ரசிகர்கள்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Apr 28, 2022 11:48 PM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில், பிரபல இந்திய வீரரின் Girl Friend வந்திருந்த புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Rishabh Pant girlfriend spotted in dc vs kkr match

கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்பட்ட நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

தடுமாறிய 'KKR'

அதன்படி, ஆடிய கொல்கத்தா அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணாவைத் தவிர யாரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. ஷ்ரேயாஸ் 42 ரன்களும், நிதிஷ் 57 ரன்களும் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் சேர்ந்திருந்தது. டெல்லி வீரர் குல்தீப் யாதவ், 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தி இருந்தார்.

Rishabh Pant girlfriend spotted in dc vs kkr match

அசத்திய டெல்லி கேப்பிடல்ஸ்

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியிலும், வார்னர் மட்டும் 42 ரன்கள் எடுத்து அவுட்டாக, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் நிலவியது. கடைசி கட்டத்தில் அக்சர் மற்றும் போவல் ஆகியோர் ரன் சேர்த்ததால், டெல்லி அணி வெற்றி பெற்றிருந்தது.

Rishabh Pant girlfriend spotted in dc vs kkr match

நெருக்கடியில் ஷ்ரேயாஸ் அண்ட் கோ

இந்த வெற்றியின் மூலம், 8 புள்ளிகளுடன் டெல்லி அணி 6 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மறுபக்கம், 9 போட்டிகளில் ஆடி மூன்றில் மட்டும் வெற்றி கண்டுள்ள கொல்கத்தா அணி, அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டின் Girl Friend இஷா நேகி, டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண மைதானத்தில் வந்திருந்த புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Rishabh Pant girlfriend spotted in dc vs kkr match

ரிஷப் பண்ட்டின் காதலி..

ரிஷப் பண்ட் மற்றும் இஷா நேகி ஆகியோர், கடந்த சில ஆண்டுகளாகவே பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்து வருகின்றனர். இருவரும் மறைமுகமாக தங்களின் காதல் குறித்து பல பதிவுகளையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். அந்த வகையில், இன்று டெல்லி ஆடிய போட்டியைக் காண ரிஷப் பண்ட்டின் சகோதரி சாக்ஷி பண்ட்டுடன் இஷா நேகியும் வந்திருந்தார்.

Rishabh Pant girlfriend spotted in dc vs kkr match

போட்டிக்கு நடுவே டெல்லி அணிக்காக, இஷா ஆர்ப்பரித்துக் கொண்டாடிய புகைப்படங்களும் தற்போது அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

Tags : #RISHABHPANT #ISHA NEGI #SAKSHI PANT #DC VS KKR #IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rishabh Pant girlfriend spotted in dc vs kkr match | Sports News.