'தொடர் சர்ச்சைகளுக்கு பின்'... 'முதல்முறையாக சிஎஸ்கே, தோனி குறித்து'... 'மனம் திறந்த சுரேஷ் ரெய்னா!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்திய சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ள நிலையில் அதுகுறித்து பேசியுள்ள சுரேஷ் ரெய்னா, "நான் குடும்ப சூழ்நிலை கருதியே ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன். சிஎஸ்கே என்னுடைய குடும்பம். தோனி எனக்கு மிகவும் முக்கியமானவர். இது மிகவும் கடினமான முடிவு. அணிக்கும் எனக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. யாரும் சரியான காரணம் இல்லாமல் 12.5 கோடி ரூபாயை வேண்டாமென விட்டுச்செல்ல மாட்டார்கள்.
ஐபிஎல் போட்டியிலிருந்து நான் விலகியது பற்றி சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கள் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அவர் என்னை அவருடைய மகன் போல் பார்க்கிறார். அவர் கூறியதை தந்தை திட்டியது போல் உணருகிறேன். நான் இப்போது தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் தான் இருக்கிறேன். விரைவில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
