ஆப்பு கண்ணுக்கு தெரியாது! பாக்கத்தான் தம்மாத்துண்டு 'வெடிச்சா' அவ்ளோ தான்... தெறிக்க விடும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை-மும்பை அணி இடையிலான முதல் போட்டி தற்போது அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ய, மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. ஓபனிங் இறங்கிய ரோஹித், டி காக் இருவரும் அதிரடியாக அடித்து ஆடினர்.

இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. சென்னை ரசிகர்கள் நகம் கடிக்க ஆரம்பித்தனர். 4 ஓவர்கள் வரையில் விக்கெட் எதுவும் இல்லை. இதனால் ரசிகர்கள் வருத்தப்பட கோடிக்கணக்கில் கொட்டி எடுக்கப்பட்ட பியூஷ் சாவ்லாவை கேப்டன் களமிறக்கினார்.
Vaanam Thottu Ponaaaaar! 😍 Newest Singhams teaming up to get the first one! @CurranSM #WhistleFromHome #WhistlePodu #Yellove #MIvCSK pic.twitter.com/wgPQqHHId5
— Chennai Super Kings (@ChennaiIPL) September 19, 2020
இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. 5-வது ஓவரின் கடைசி பந்தில் பியூஷ் சாவ்லா தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்தார். தொடர்ந்து 6-வது ஓவரின் முதல் பந்தை வீசிய சாம் கரண் அதிரடியாக விளையாடிய டி காக்கை வெளியேற்றி மாஸ் காட்டினார். தற்போது மும்பை அணியில் திவாரி, சூர்யகுமார் யாதவ் களத்தில் இருக்கின்றனர்.
On the way to ambush the Junior Super Kings tourney! Pocket sized dynamite! 🔥 #WhistleFromHome #WhistlePodu #Yellove #MIvCSK pic.twitter.com/hizvDGRhV8
— Chennai Super Kings (@ChennaiIPL) September 19, 2020
முன்னதாக பியூஷ் சாவ்லாவை அணியில் எடுத்ததற்கு சென்னை ரசிகர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் தோனியின் முடிவை கிண்டல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
