ஆரம்பமே அமர்க்களம் தான்! ரெய்னாவுக்கு பதிலா யாரை 'எறக்கி' விட்ருக்காங்கன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநீண்ட இடைவெளிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று களத்தில் இறங்கி விளையாட உள்ளார். இதனால் அபுதாபியில் இன்று நடைபெறும் மும்பை-சென்னை இடையிலான முதல் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆதரவு உள்ளது.

இந்த நிலையில் சென்னை கேப்டன் தோனிக்கு ஆரம்பமே அட்டகாசமாக அமைந்துள்ளது. டாஸை வென்ற அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பவுலிங் தேர்வு செய்துள்ளார். சேஸிங் செய்வது எப்போதுமே தோனிக்கு பிடித்தமானது என்பதால் இன்றைய போட்டியில் அவர் தன்னுடைய வெறித்தன பார்மை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகி இருக்கின்றனர். இதேபோல இளம்வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டும் கொரோனா காரணமாக குவாரன்டைன் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா இடத்தில் பாப் டூ பிளஸிஸை தோனி களமிறக்கி உள்ளார். ரெய்னாவின் விலகல் சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் தோனி அணியை கரை சேர்த்து காப்பாற்றி விடுவார் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்
1. முரளி விஜய் 2. ஷேன் வாட்சன் 3. பாப் டூ பிளசிஸ் 4. அம்பாதி ராயுடு 5. கேதார். ஜாதவ் 6. தோனி(கேப்டன்) 7. ஜடேஜா 8. சாம் கரண் 9. தீபக் சாஹர் 10. லுங்கி நிகிடி 11. பியூஷ் சாவ்லா
மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்
1. டி காக் 2. ரோஹித் சர்மா(கேப்டன்) 3. சூர்யகுமார் யாதவ் 4. எஸ் திவாரி 5. குர்னால் பாண்டியா 6. ஹர்திக் பாண்டியா 7. பொல்லார்ட் 8. பட்டின்சன் 9. ராகுல் சாஹர் 10. போல்ட் 11. பும்ரா

மற்ற செய்திகள்
