WOMEN WORLD CUP 2022 : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி கெத்தா முதல் இடத்துக்கு சென்ற இந்தியா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியுசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலகக்கோப்பை தொடரில் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு சென்றுள்ளது.
மாமனாருடன் ஒரே அறையில் இருந்த மனைவி.. கையும் களவுமாக பிடித்த கணவன்.. கடைசியில் நடந்த அதிர்ச்சி..!
மகளிர் உலகக்கோப்பை
ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, தற்போது நியூசிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில், மிதாலி தலைமையிலான இந்திய மகளிர் அணி, இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, ஒன்றில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. அதையடுத்து மூன்றாவது போட்டியாக இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார். இது அவர் விளையாடும் 6 ஆவது உலகக்கோப்பை தொடர். இதற்கு முன்னர் இந்த சாதனையை இந்தியாவின் சச்சினும் பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட் ஆகிய இருவர் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர்.
பேட்டிங்கில் கலக்கிய இரண்டு வீராங்கனைகள்
இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். அதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பான் தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவருடன் பின் வரிசையில் இறங்கிய ஹர்மன்ப்ரீத் சிங் கவுர் அதிரடியாக விளையாட இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். ஸ்மிருதி 129 ரன்களும் , ஹ்ர்மன் 109 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 317 ரன்கள் சேர்த்தது.
திணறிய வெஸ்ட் இண்டீஸ்
இதையடுத்து 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான டியாண்ட்ரா மற்றும் ஹார்லி ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 12 ஓவர்களில் இந்த கூட்டணி 100 ரன்கள் சேர்த்தது. ஆனால் இவர்கள் இருவரும் அவுட் ஆனது, அந்த அணியில் எந்த ஒரு வீராங்கனையும் நிலைத்து நின்று ஆடமுடியாமல் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தனர். இதனால் 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 162 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இதன் மூலம் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஸ்னே ரானா அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த இமாலய வெற்றியால் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது.
மறுபடியும் lockdown- ஆ… 90 லட்சம் மக்களை வீட்டுக்குள் முடங்க உத்தரவிட்ட சீன அரசு