அடுத்தடுத்து கேட்ச் விட்ட இந்திய வீரர்கள்.. அதே ஓவரில் சிக்ஸர் லைன் வெளியே நின்ன பையன் செஞ்ச விஷயம்.. வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி 20 தொடர் நடைபெற்றிருந்த நிலையில், இதனை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் தொடர் இன்று (06.10.2022) ஆரம்பமானது.
டி 20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி உள்ளனர்.
இதனால், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் களமிறங்க உள்ளது. தொடர்ந்து, இன்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக தாமதமாக ஆரம்பமானது. இதனால், போட்டியும் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, ஆரம்பத்தில் இருந்தே மெல்ல மெல்ல ரன்கள் சேர்த்தது. ஆனால் ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசீன் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் எடுத்தனர். இறுதி வரை அவர்கள் களத்தில் நின்ற நிலையில், மில்லர் 75 ரன்களும், கிளாசீன் 74 ரன்களும் எடுத்திருந்தனர். இதனால், தென் ஆப்பிரிக்க அணியும் 40 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது.
இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. மேலும், ரன் சேர்க்கவும் அவர்கள் தடுமாற்றம் கண்டனர். ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்த போதும், இந்திய அணியால் 40 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. சஞ்சு சாம்சன் அவுட் ஆகாமல் 86 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
38 ஆவது ஓவரை ஆவேஷ் கான் வீசிய போது, முதல் இரண்டு பந்துகளில் க்ளாசீன் மற்றும் மில்லர் ஆகியோர் கொடுத்த கேட்சினை அடுத்தடுத்த பந்துகளில் சிராஜ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தவற விட்டனர். தொடர்ந்து மூன்றாவது பந்தில் கைக்கு வந்த பந்தை இஷான் கிஷன் தவற விட அது பவுண்டரியாகவும் மாறி இருந்தது. இதனால், இந்திய அணியின் ஃபீல்டிங் மீது கடும் விமர்சனம் உருவானது.
— Richard (@Richard10719932) October 6, 2022
ஆனால், அதே ஓவரின் நான்காவது பந்தில் டேவிட் மில்லர் அடித்த சிக்ஸை பவுண்டரி கோடுக்கு வெளியே நின்ற Ball Boy, மிகவும் அற்புதமாக கேட்ச் செய்தார். அடுத்தடுத்து இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங் ரசிகர்களை கடுப்பேற்றிய நிலையில், அந்த பையன் எடுத்த கேட்ச் தொடர்பான வீடியோ தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
— Richard (@Richard10719932) October 6, 2022

மற்ற செய்திகள்
