'பெரிய சம்பவம் காத்திருக்கு'... 'டி20 உலகக்கோப்பையில் அடிச்சு தும்சம் செய்யப்போகும் வீரர்கள்'... தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாசப் போகும் வீரர்கள் குறித்து தினேஷ் கார்த்திக் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதன் போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும்.
டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை குவிக்கக்கூடிய திறமை யாருக்கு இருக்கிறது என்பதை தினேஷ் கார்த்திக் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், ''இந்திய அணியின் ரோகித் சர்மா அல்லது ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இருவரில் ஒருவர்தான், டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது.
இரண்டு பேரும் ஓப்பனிங் வீரர்கள் என்பதால் நிலைத்து நின்று அடித்து ஆடுவார்கள். ரோகித் சர்மா உலகக்கோப்பை போட்டிகளில் எப்படி விளையாடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். உலகக் கோப்பை தொடர், ரோஹித் சர்மா இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. எனவே ரோஹித் சர்மா உலகக்கோப்பை போட்டிகளில் நிச்சயம் ரன் மழை பொழிவார்'' என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
