'11 வயது மகளை கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்க...' 'மனைவியினால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்... 'துபாய் மன்னருக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Mar 06, 2020 06:38 PM

துபாய் மன்னர் ஷேக் முகமது மீது அவரின் மனைவி கூறியிருந்த குற்றச்சாட்டு அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

A London court has ruled against Sheikh Mohammed

சில கருத்து வேறுபாடு காரணமாக துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் - மகோடமுக்கும் அவரின் ஆறாவது மனைவியான இளவரசி ஹாயா பின்ட் அல் ஹுசைனும் தனி தனியாக வாழ்ந்து வருகின்றன. தற்போது இளவரசி ஹாயா மன்னரிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதற்கிடையில் தன் இரு பெண் குழந்தைகளுடன் இளவரசி ஹாயா கடந்த வருடம் மே மாதம் துபாயிலிருந்து வெளியேறி தலைமறைவாகி உள்ளார். முதலில் அவர், ஜெர்மனிக்குச் சென்றதாகவும், அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வந்தது. அதன் பின் லண்டனில் தஞ்சம் அடைந்து தன் இரு குழந்தைகளுடன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அதை தொடர்ந்து இளவரசி ஹாயா தன் கணவரால் தனக்கும், தன்னுடைய இரு மகள்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக துபாய் மன்னர் ஷேக் முகமது மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய 11 வயது மகளை சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கடந்த 8 மாதங்களாக லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் தற்போது இளவரசிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. மேலும் இளவரசி ஹாயாவுக்கும் அவரின் குழந்தைகளுக்கும் தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து மன்னர் மீது அளிக்கப்பட்ட கடத்தல், கட்டாயப்படுத்துதல், சித்ரவதை, அச்சுறுத்தல் விளைவித்தல் போன்ற அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு துபாய் மன்னருக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லண்டன் நீதிமன்றம் இந்த வழக்கை மன்னர் மீது சுமத்தப் பட்ட வழக்கு என்று பார்க்காமல் ஒரு தனி நபர் வழக்காகவே பார்த்து நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது. மேலும் துபாய் நாட்டு மன்னரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதார மற்றும் வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சவுதி இளவரசர் மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு இதுவரை சவுதி அரசு எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #JUDGEMENT