"இந்தியாவுக்கு இது தேவை தானா?..." 'ஹர்பஜன் சிங்' போட்ட 'ட்வீட்'... கொதித்தெழுந்து 'கமெண்ட்' செய்த 'ரசிகர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், கடந்த ஓராண்டாக உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த வேண்டி, பல உலக நாடுகள் தடுப்பு மருந்து சோதனையின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்து ஒன்று மக்களிடையே கேலிப் பொருளாகியுள்ளது.
ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கொரோனாவுக்கு எதிரான பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசியின் துல்லியம் - 94%, மாடர்னா தடுப்பூசியின் துல்லியம் - 94.5%, ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் துல்லியம் - 90%, ஆனால் இந்தியாவில் தடுப்பு மருந்து இல்லாமலே 93.6% பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இப்படி இருக்கையில், இந்தியாவிற்கு தடுப்பூசி தேவை தானா?' என்று பதிவிட்டுள்ளார்.
PFIZER AND BIOTECH Vaccine:
Accuracy *94%
Moderna Vaccine: Accuracy *94.5%
Oxford Vaccine: Accuracy *90%
Indian Recovery rate (Without Vaccine): 93.6%
Do we seriously need vaccine 🤔🤔
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 3, 2020
இந்த பதிவை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மீதமுள்ள 6.4% பேர் என்பது பல கோடிக்கணக்கான மக்கள் என்றும், அதனை எப்படி இந்தியா வேகமாக குணமடைந்து வருகிறது என எடுத்துக் கொள்ள முடியும் என்றும் பலர் ஹர்பஜன் சிங் பதிவின் கீழ் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர், இந்த பதிவை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
