‘கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்கள்’... 'ஐசிசி விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட இந்திய வீரர்கள்’... ‘இவர் மட்டும் எல்லாப் பிரிவிலும் நாமினேட்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Nov 24, 2020 09:07 PM

கடந்த 10 ஆண்டுகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்க முடிவெடுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி.

ICC nominates Kohli, Ashwin for Men’s Player of the Decade Award

அதன்படி 10 ஆண்டுகளில்,  சிறந்த வீரர், ஒருநாள், டி20, டெஸ்ட் கிரிக்கெட்டுகளின் சிறந்த வீரர், ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் வீரர் என ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரை தேர்வு செய்து பல விருதுகளை வழங்குகிறது ஐசிசி. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. 

இதற்கான  பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆடவர் பிரிவில் விராட் கோலி, ரோகித் சர்மா, தோனி, அஸ்வின் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல், இந்திய வீராங்கனைகளில் மிதாலி ராஜ், ஜூலான் கோஸ்வாமி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

அந்தவகையில், 

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்:

விராட் கோலி (இந்தியா),

ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா),

ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா),

ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா),

குமார் சங்கக்கரா (இலங்கை),

ஜோ ரூட் (இங்கிலாந்து),

கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து).

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியல்:

விராட் கோலி (இந்தியா),

ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா),

ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து),

ரங்கனா ஹெராத் (இலங்கை),

கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து),

யாசிர் ஷா (பாகிஸ்தான்),

ஜோ ரூட் (இங்கிலாந்து).

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் வீரருக்கான பரிந்துரை பட்டியல்:

விராட் கோலி (இந்தியா),

தோனி (இந்தியா),

ரோஹித் சர்மா (இந்தியா),

டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா),

மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா),

மலிங்கா (இலங்கை),

குமார் சங்கக்கரா (இலங்கை).

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 வீரருக்கான பரிந்துரை பட்டியல்:

கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்),

ரோகித் சர்மா (இந்தியா),

மலிங்கா (இலங்கை),

ரஷீத் கான் (ஆஃப்கானிஸ்தான்),

இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா),

விராட் கோலி (இந்தியா),

ஆரோன் ஃபின்ச் (ஆஸ்திரேலியா).

கடந்த 10 ஆண்டுகளில் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதுக்கு பரிந்துரை:

தோனி (இந்தியா),

கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து),

அன்யா ஷ்ருப்சோலே (இங்கிலாந்து),

ஜெயவர்தனே (இலங்கை),

டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து),

விராட் கோலி (இந்தியா),

கேத்தரின் ப்ரண்ட் (இங்கிலாந்து),

பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து),

மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான்). இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எல்லாப் பிரிவிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். எனினும், வாக்குகள் அடிப்படையில் வெற்றிபெற்ற வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. ICC nominates Kohli, Ashwin for Men’s Player of the Decade Award | Sports News.