3000 அடி உயரமான மலையில் அருற்பாலிக்கும் விநாயகர்.. அங்கு சென்று வியப்பை ஏற்படுத்திய பூசாரி.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் பல இடங்களில் ஏராளமான புகழ் பெற்ற விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளன. மற்ற கடவுள்கள் உள்ள கோயில்களில் கூட முதலில் முழு முதல் கடவுளாக இருக்கும் விநாயகரை வணங்கி விட்டு தான் பின்னர் மூலக்கடவுளையும் வணங்க செல்வார்கள்.

Images are subject to © copyright to their respective owners.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அடர்ந்த வனப்பகுதி ஒன்றில் மிக உயரமான மலை உச்சியில் இருக்கும் விநாயகர் சன்னதியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தோல்கால் மலையில் அமைந்துள்ளது பிரபல விநாயகர் கோயில். முரசு போல வடிவில் இந்த மலை இருப்பதால் இந்த கோயில் Dholkal Ganesh Temple என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
சுமார் 1000 ஆண்டு பழமை பெற்று விளங்கும் இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் இருப்பதாகவும் தகவல் குறிப்பிடும் நிலையில், சத்தீஸ்கரின் பைலடிலா என்னும் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இரும்பு தாதுக்கள் நிறைந்த காடுகளில் மிக முக்கியமானதாக இது பார்க்கப்படும் சூழலில், அதன் மலை உச்சியில் இருக்கும் விநாயகர் கோவிலின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
மலையின் உயரத்தின் அடிப்படையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் நமக்கே ஒருவித சிலிரிப்பு ஏற்படும். அப்படி இருக்கையில், இந்த மலை மீது ஏறி பூசாரி ஒருவர் பூஜை செய்து வரும் வீடியோ தற்போது அதிகம் வைரலாகி பலரையும் மிரண்டு போகவும் வைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையவாசிகளை தொடர்ந்து வியக்க வைத்தும் வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
9 அல்லது 10 ஆம் நூற்றாண்டில் நாக்வன்ஷி வம்சத்தின் போது இந்த கோவில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் கூறும் நிலையில், அங்கே சாலை வசதி இல்லை என்றும் தெரிகிறது. இதனால், சுமார் 40 நிமிடங்கள் காட்டுப் பாதையில் நடந்து இந்த விநாயகர் கோவிலை அடைய முடியும்.

மற்ற செய்திகள்
