"CSK வின் பழைய ரெக்கார்ட பாருங்க.. அவங்க கோட்டை அது".. ஆரூடம் சொன்ன கவுதம் கம்பீர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்வது மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "கோலியோட ஃபார்முலாவை தான் ரோஹித்தும் பின்பற்றுகிறார்" - கேப்டன்சி பற்றி பேசிய கவுதம் காம்பீர்..!
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் லக்னோ அணியின் பயிற்சியாளருமான கௌதம் கம்பீர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில் "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் விளையாடினால் அது எப்போதுமே அவர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
பழைய ரெக்கார்டுகளை பார்த்தால் சென்னையில் சிஎஸ்கே எப்போதும் அதிக அளவில் வெற்றியை குவித்து இருக்கிறது. அது அவர்களது பலமான கோட்டை. நடப்பு தொடரிலும் சென்னையில் அதிக வெற்றிகளை CSK குவித்துவிட்டால், வெளியில் நடைபெறும் போட்டிகளில் குறைவான போட்டிகளில் வெற்றிபெற்றால் கூட போதுமானது" எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், 10 அணிகள் பங்கேற்பதாலும் ஒவ்வொரு அணியில் இடம்பெறும் திறமையான வீரர்களின் பங்களிப்பு அதிகமிருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யமானதாக இருக்கும் எனவும் கவுதம் கம்பீர் கணித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கம்பீர் அந்த அணிக்காக 2012 ஆம் ஆண்டு கோப்பையை பெற்றுக்கொடுத்தார். தற்போது லக்னோ அணியின் பயிற்சியாளராக இருக்கும் கம்பீர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Also Read | "தாக்குதல் நடத்துனது யாரு?".. டெல்லி தமிழ் மாணவர்களுடன் VIDEO CALL-ல் பேசிய அமைச்சர் உதயநிதி.. வீடியோ..!