'இந்த ஐபிஎல் முடியறதுக்குள்ள'... 'கோலி எவ்ளோ ரன் எடுப்பாரு?'... 'தொடர் விமர்சனத்துக்கு நடுவே'... 'உண்மையாகுமா பிரபல வீரரின் கணிப்பு?!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் கோலியின் ஆட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் பெங்களூரு அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றபோதும், கேப்டன் விராட் கோலி 11 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் இதுவரை விராட் கோலி விளையாடியுள்ள 3 போட்டிகளில் 14, 1 மற்றும் 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதையடுத்து இதுபற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர், "கோலி ஒரு திறமையான பேட்ஸ்மேன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த ஐபிஎல் தொடர் முடிவதற்குள் அவர் 400 முதல் 500 ரன்களை சேர்ப்பார். ஒவ்வொரு ஆண்டுமே கோலி அதனை செய்து வருகிறார். ஒரு ஐபிஎல் தொடரில் அவர் ஆயிரம் ரன்களை நெருங்கினார். மேலும் அந்தத் தொடரில் அவர் 4 சதங்களை அடித்தார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.