'குட்டி' பையனின் பேட்டிங்கை பார்த்து பெருமிதம்... வைரலாகும் 'நடிகை'யின் போஸ்ட்... அப்போ அது உண்மை தானா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணி பெங்களூர் அணிக்கு எதிராக சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இரண்டு அணிகளும் சரிசமமாக மோதியதால் எந்த அணி ஜெயிக்க போகிறது? என்ற பரபரப்பு கடைசிவரை குறையவில்லை.

கண்டிப்பாக தோற்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணியை அந்த அணியின் இளம்வீரர் இஷான் கிஷன், அனுபவ வீரர் பொல்லார்ட் இருவரும் சேர்ந்து வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். குறிப்பாக 22 வயது இஷான் கிஷனின் போராட்டம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
சதமடித்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 99 ரன்களில் இஷான் கிஷன் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைப்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் வருத்தம் அடைந்தனர். பெங்களூர் அணி வெற்றி பெற்றாலும் இஷானின் போராட்டம் அனைவரையும் கவனிக்க வைத்தது.
இந்த நிலையில் இஷானின் காதலி என கூறப்படும் பாலிவுட் நடிகை அதிதி ஹூண்டியா தனது இன்ஸ்டா பதிவில் , ''உன்னை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் பேபி'' என அவருக்கு ஆறுதல் தெரிவித்து இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாக அப்போ ரெண்டு பேரும் காதலிக்கிறாங்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
