முதல்லயே இதை பண்றவங்களுக்கு ‘80% வெற்றி’ வாய்ப்பு இருக்கு.. வெற்றி, தோல்வியை தீர்மானிக்க உள்ள துபாய் மைதானம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் இறுதிப்போட்டி நடைபெற உள்ள துபாய் மைதானம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் (IPL) தொடர் இறுதிப்போட்டி இன்று (15.10.2021) இரவு 7:30 மணியளவில் துபாய் (Dubai) மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதுகின்றன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இறுதிப்போட்டி நடைபெற உள்ள துபாய் மைதானம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுக்கும் நன்றாக ஒத்துழைக்கும் வகையில் மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஒத்துழைக்கும் வகையில் உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் துபாய் மைதானம் கொஞ்சம் பெரியதாக இருக்கும். அதனால் பவுண்டரில் எல்லைகளும் தூரமாக அமைந்திருக்கும். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் சராசரியாக 160 ரன்களுக்கும் மேல் அடிக்க முடியும். அதேவேளையில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணியே அதிக முறை வென்றுள்ளது. அதவாது 80 சதவீத வெற்றிகள் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே கிடைத்துள்ளன.
அதன்படி டாஸ் (Toss) வென்று பவுலிங்கை தேர்வு செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக கருதப்படுகிறது. அதனால் இப்போட்டியில் டாஸ் வெற்றி பெறுவது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.