டக் அவுட் ஆனதும் நேரா ‘ரசல்’ போன இடம்.. வைரலாகும் போட்டோ.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவுட்டான பின் பெவிலியன் திரும்பிய கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ரசல் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 41-லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களின் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 57 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி, 19-வது ஓவரின் முடிவிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைவதன் மூலம், தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனையை கொல்கத்தா அணி படைத்தது.
இந்த நிலையில் இப்போட்டியில் குல்தீப் யாதவ் வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்டானார். அதனால் 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் கொல்கத்தா அணி இருந்தது. அந்த நேரத்தில் களமிறங்கிய ரசல் அதிரடியாக விளையாடி பெரிய அளவில் ரன்களை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் இரண்டு பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனை அடுத்து 3-வது பந்தை இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயன்றார். ஆனால் பந்து நேராக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் கைக்கு செல்லவே, அவர் ஸ்டம்பிங் செய்துவிட்டார். இதனை அடுத்து வேகமாக ஓய்வு அறைக்கு திரும்பிய அவர், நேராக சாப்பிட சென்றுவிட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும், அவருக்கு பசி எடுத்ததால் தான் சீக்கிரமாக அவுட்டாகி விட்டார்போல என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
My fantasy league captain 🤣 #andrerussell pic.twitter.com/feXXOeUeWs
— naan than (@_raja) April 28, 2022
When you are hungry, but 5 wickets fell quickly. So you throw your wicket as well to go back and have dinner. #KKRvDC #andrerussell #KKR pic.twitter.com/tgna92EZxP
— Rocky (@rocky_says_suii) April 28, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
