"போன்ல எவ்வளவு நேரம் தான் பேசுவ?" கண்டித்த மாமியார்.. கடுப்பில் மருமகள் செஞ்ச காரியம்.. நடுங்கிப்போன கணவன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில், அதிகநேரம் மொபை போனில் பேசுவதை கண்டித்த மாமியாரை மருமகளே கொலை செய்திருப்பது அந்த வட்டார மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் அஜய் பர்மன். இவர் சில தினங்களுக்கு பணியில் ஈடுபட்டிருந்த போது அவரது மனைவி போன் செய்திருக்கிறார். போனில் அவரது மனைவி அஜய்யின் தாய், மரணமடைந்துவிட்டதாகவும், வெளியே சென்ற அவர் காயங்களுடன் திரும்பி வந்ததாகவும் கொஞ்ச நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் அதிச்சியடைந்த அஜய் உடனடியாக வீட்டிற்கு திரும்பியுள்ளார். அங்கே, உடலில் காயங்களோடு அவரது தாய் மரணமடைந்திருந்ததை கண்டு கதறி அழுதிருக்கிறார் அஜய்.
விரைந்து வந்த போலீஸ்
இந்நிலையில், அஜய் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை அதிகாரிகள், இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அஜய்யின் மனைவியை காவல்துறையினர் விசாரணை செய்யும்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், துருவி துருவி விசாரணை நடத்த தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பேசிய ஹட்டா காவல் நிலையப் பொறுப்பாளர் எச்.ஆர்.பாண்டே," போலீசார் நடத்திய விசாரணையில் அஜய்யின் மனைவி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சில தினங்களுக்கு முன்னர் அவர் இரவில் அதிகநேரம் மொபைல் போனில் பேசுவதாக அஜய்யிடம் அவரது மாமியார் குற்றம் சாட்டியிருக்கிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது" என்றார்.
உடலில் இருந்த காயங்கள்
மரணமடைந்த பெண்மணியின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டு சந்தேகப்பட்ட காவத்துறையினர் அதன்பிறகே அஜய்யின் மனைவியிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது காவலர்களிடம் அஜய்யின் மனைவி, இரவில் அதிக நேரம் போன் பேசுவதாக தனது கணவரிடம் கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவரை தாக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இரவில் அதிகநேரம் போன் பேசுவதை கண்டித்த மாமியாரை, மருமகளே கொலை செய்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தையே உலுக்கியுள்ளது.