“ஒரு வருசமா மதிய சாப்பாடு சாப்பிடல”.. தினமும் 80 கி.மீ பயணம்.. யாரும் அறியாத MI இளம் வீரரின் உருக்கமான மறுபக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் குமார் கார்த்திகேயா குறித்த உருக்கமான தகவலை அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை அணி, கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் இளம் வீரர் கார்த்திகேயா.
அப்போட்டியில் தான் குமார் கார்த்திகேயா அறிமுக வீரராக களமிறங்கினார். தனது முதல் போட்டியிலேயே 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். அந்த ஒரு விக்கெட் ஆட்டத்தையே மாற்றிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். விக்கெட்கள் அதிகளவில் எடுக்கவில்லை என்றாலும், கார்த்திகேயாவின் பவுலிங்கை ராஜஸ்தான் அணியால் சமாளிக்கவே முடியவில்லை.
இந்த நிலையில் குமார் கார்த்திகேயா குறித்து அவரது பயிற்சியாளர் பரத்வாஜ் பேசியுள்ளார். அதில், ‘கார்த்திகேயாவின் அப்பா போலீஸ் கான்ஸ்டபிள். கான்பூரில் இருந்து டெல்லிக்கு குடிப்பெயர்ந்த அவர், 15 வயதில் கிரிக்கெட் ஆட ஆசைப்பட்டார். ஆனால் குடும்பத்திற்கு பொருளாதார சிக்கல் கொடுக்கக்கூடாது என்பதற்காக, பல அகாடமியில் இலவசமாக பயிற்சி பெற கேட்டார். கடைசியில் எனது அகாடமியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன்.
அந்த சிறு வயதிலேயே குமார் கார்த்திகேயா கூலி வேலைக்கு சென்றார். பயிற்சி அகாடமியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு தினமும் இரவு நேரத்தில் வேலைக்கு செல்வார். காலையில் பேருந்தில் வராமல் ஏதேனும் ஒரு வண்டியை பிடித்து வந்துவிடுவார். ஏனென்றால் அதில் 10 ரூபாய் சேமித்து பிஸ்கட் வாங்கி சாப்பிடுவார்.
கார்த்திகேயா நீண்ட பயணம் செய்கிறார் என்பதால், எனது அகாடமியில் சமையல்காரருடன் தங்கிக்கொள்ள கூறினேன். மதிய நேரத்தில் சமையல்காரர் உணவு வழங்கினதும் கார்த்திகேயா அழத்தொடங்கி விட்டார். அப்போதுதான் அவர் ஒரு வருடமாக மதிய உணவே சாப்பிடாமல் விளையாடியுள்ளார் என்பது தெரியவந்தது.
டெல்லி அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மத்திய பிரதேசத்தில் உள்ள எனது நண்பரிடம் அனுப்பி வைத்தேன். அங்கு தேர்வாகி 2 வருடங்களில் 50-க்கும் அதிகமான விக்கெட்களை குவித்தார். கார்த்திகேயாவின் கடின உழைப்பு இன்று நல்ல இடம் கிடைத்துள்ளது’ என பயிற்சியாளர் பரத்வாஜ் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
