“ஏன் இன்னும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு தரவே இல்ல..?” MI அணியின் கோச் சொன்ன சுவாரஸ்ய தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅர்ஜுன் டெண்டுல்கருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கம் அளித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமாக சொதப்பி வருகிறது. தொடர்ந்து 8 தோல்விகளை சந்தித்து ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்தது. சமீபத்தில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளை மட்டும் தான் பெற்றுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் 16 புள்ளிகளை பெற வேண்டும். அதனால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டு விட்டது.
அதனால் கேப்டன் ரோகித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இன்னும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்பட வில்லை. இதுகுறித்தும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகனுக்கு ஏன் இன்னும் வாய்ப்பே கிடைக்கவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனே விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘அணியில் அனைவருக்குமே வாய்ப்பு கிடைக்கும். அணியின் காம்பினேஷ் மற்றும் வெற்றிகள்தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். ஒவ்வொரு காம்பினேஷனாக முயற்சி செய்து வருகிறோம்.
இப்போதுதான் முதல் வெற்றியை பெற்றுள்ளோம். அந்த நம்பிக்கையில் மிகவும் சிறந்த வீரர்களை களத்திற்கு கொண்டு வருகிறோம். அதில் அர்ஜுன் டெண்டுல்கரும் ஒருவராக இருந்தால் நிச்சயம் அவர் குறித்தும் பரிசீலிப்போம். ஆனாலும் அனைத்து காம்பினேஷன்களையும் வைத்து தான் இறுதி முடிவுகளை எடுப்போம்’ என மஹிலா ஜெயவர்தனே கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
