‘உயரிய கேல் ரத்னா விருது’!.. பிசிசிஐ பரிந்துரைத்த பட்டியலில் இடம்பிடித்த 2 தமிழர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமத்திய அரசு வழங்கும் கேல் ரத்னா விருத்துக்கு இந்திய கிரிக்கெட்டை வீரர்களின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வினை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
அதேபோல் தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையுமான மிதாலிராஜ் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர் இந்திய மகளிர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக உள்ளார். தற்போது இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
அதேபோல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான், கே.எல்.ராகுல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரது பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரது பெயரையும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பியுள்ளது. இதில் கடந்த முறை ஷிகர் தவானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
