பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pichaimuthu M | Jan 27, 2023 12:29 PM

இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Indian cricketer Natarajan visit chidambaram natarajar temple

Also Read | "நீங்க டைட்டில் வின்னர் இல்ல, Total Winner".. விக்ரமனுக்கு 'திருமாவளவன்' கொடுத்த பெயர்.. கூடவே கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு!!

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன், சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்த நடராஜன், தனது  யாக்கர் பந்துவீச்சால்  பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இதனால், கடந்த 2020-21  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நடராஜன் நெட் பவுலராக இடம்பிடித்தார்.

Indian cricketer Natarajan visit chidambaram natarajar temple

பிரதான வீரர்களின் காயத்தால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் அறிமுகமானார்.

2020 - 2021ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த மூன்று வகையான (டி20, ஒருநாள், டெஸ்ட்) போட்டிகளிலும் அறிமுகமான நடராஜன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

Indian cricketer Natarajan visit chidambaram natarajar temple

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிந்த பிறகு முழங்கால் காயம் காரணமாக 2021 ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த நடராஜன், கடந்த ஐபிஎல் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து வருடம் நடக்கும் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்கு விளையாட உள்ளார்.

சில நாட்களுக்கு முன் நடராஜன் தனது கிராமத்தில் தனது பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை சில மாதங்களுக்கு முன் திறந்தார். இந்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடராஜன், தனது பெயரில் கிரிக்கெட் அகடமியை சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் துவங்கி உள்ளார். வரும் மார்ச் மாதம் முதல் நடராஜன் உருவாக்கி உள்ள கிரிக்கெட் மைதானத்தில்  பயிற்சிகள் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian cricketer Natarajan visit chidambaram natarajar temple

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பஞ்ச பூத தளங்களில் பிரசித்தி பெற்ற ஆகாய தலமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். பொன்னாடை மலர் மாலை அணிந்து கொண்டு நடராஜன் தமது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | Budget 2023: அல்வா கிளறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.. பட்ஜெட்டுக்கும் அல்வாவுக்கும் இப்படி ஒரு சம்பந்தம் இருக்கா..?!

Tags : #INDIAN CRICKETER #INDIAN CRICKETER NATARAJAN #CHIDAMBARAM NATARAJAR TEMPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian cricketer Natarajan visit chidambaram natarajar temple | Sports News.