வருங்கால மனைவியோடு அடுத்தடுத்து இரண்டு பிரபல கோயில்களில் சாமி தரிசனம் செய்த ஆனந்த் அம்பானி..! வீடியோ

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pichaimuthu M | Jan 27, 2023 10:56 AM

ஆனந்த் அம்பானி & அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் உடன் பிரபல கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Anand Ambani Radhika Merchant visit Tirupati Balaji Temple

Also Read | அதற்கு எங்க நாட்டுல இடம் இல்லை! முதல் சிறப்பு பிரதிநிதியை அறிவித்த கனடா பிரதமர்..!

முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்  ராதிகா மெர்ச்சன்டிற்கும் கடந்த  ஜனவரி 19, 2023 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்களது நிச்சயதார்த்த விழா முகேஷ் அம்பானியின் இல்லமான 'ஆண்டிலியா'வில் நடந்தது. பழமையான குஜராத்தி  பாரம்பரிய முறையில் நிச்சயதார்த்தத்தில் 'கோல் தானா' மற்றும் 'சுனாரி விதி' போன்றவற்றைத் தொடர்ந்து மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

Anand Ambani Radhika Merchant visit Tirupati Balaji Temple

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் விரன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட். மும்பையில் பள்ளிக் கல்வியை முடித்த ராதிகா, அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். அதன்பிறகு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர் பின்னர் தனது தந்தையுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார். தற்போது தனது தந்தையின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார் ராதிகா மெர்ச்சன்ட்.

Anand Ambani Radhika Merchant visit Tirupati Balaji Temple

முகேஷ் அம்பானியுடைய ரிலையன்ஸ் குழுமத்தில் எரிசக்தி துறையை தற்போது ஆனந்த் அம்பானி கவனித்து வருகிறார். சமீபத்தில் முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு துபாயில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியிருந்தார். மேலும், ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய பொறுப்புகள் முகேஷ் அம்பானியின் மகன்கள் மற்றும் மகளுக்கு  அளிக்கப்பட்டன.

இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ஆனந்த் அம்பானி & ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். திருப்பாவாடை சேவையில் இவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Anand Ambani Radhika Merchant visit Tirupati Balaji Temple

300 மரக்கால் அரிசியால் வடிக்கப்பட்ட சோற்றுடன் கூட்டு, அப்பம், அதிரசம், வடை ஆகியவற்றை பெருமாளுக்கு படைப்பது திருப்பாவாடை ஆகும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு ஆனந்த் அம்பானி & ராதிகா மெர்ச்சன்ட் கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். குருவாயூர் தேவசம்போர்டு நிர்வாகிகள் ஆனந்த் அம்பானி & ராதிகா மெர்ச்சன்ட்டை வரவேற்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர். ஒரே நாளில் இரண்டு பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆனந்த் & அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Also Read | PADMA AWARDS : RRR இசையமைப்பாளர் கீரவாணி, KGF நடிகை ரவீனா டாண்டன் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள்..!

Tags : #ANAND AMBANI #RADHIKA MERCHANT #TIRUPATI BALAJI TEMPLE #ANAND AMBANI RADHIKA MERCHANT VISIT TIRUPATI

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anand Ambani Radhika Merchant visit Tirupati Balaji Temple | India News.