VIDEO: ‘ரூல்ஸ்படி நீங்க அப்படி பண்ணுனது தப்பு’!.. சட்டென பவுலிங்கை நிறுத்தி ‘வார்னிங்’ கொடுத்த அம்பயர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது டெல்லி அணியின் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கு அம்பயர் வார்னிங் கொடுத்தனர்.
அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த 22-வது லீக் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 75 ரன்களும், ரஜத் பண்டிதர் 31 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியைப் பொறுத்தவரை, இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, அக்சர் படேல், ரபாடா மற்றும் அவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை டெல்லி அணி தவறவிட்டது. இதில் அதிபட்சமாக ஹெட்மெயர் 53 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 58 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியைப் பொறுத்தவரை ஹர்சல் படேல் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் டெல்லி கேப்பிடல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கு அம்பயர் ஒரு வார்னிங் கொடுத்தார். போட்டியின் 7-வது ஓவரை அமித் மிஸ்ரா வீச வந்தார். அப்போது மறந்துபோய் எச்சிலை பந்தில் தடவினார். தற்போது கொரோனா பரவல் காரணமாக ஐசிசி சில விதிகள் விதித்துள்ளது.
— pant shirt fc (@pant_fc) April 27, 2021
அதன்படி கிரிக்கெட் வீரர்கள் பந்தில் எச்சில் தடவக்கூடாது. ஒரு முறை செய்தால் அந்த வீரருக்கு வார்னிங் கொடுக்கப்படும். மீண்டும் அதே தவற்றை அந்த வீரர் செய்தால், அவர் சம்பந்தப்பட்ட அணிக்கு 5 ரன்கள் குறைக்கப்படும். அந்த வகையில் நேற்று அமித் மிஸ்ராவுக்கு அம்பயர் வார்னிங் கொடுத்துவிட்டு, பந்தில் சானிடைசர் தடவிக் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.