"நல்லா தான் ஆடுனேன்.. ஆனாலும், அந்த ஒரு தப்பால, எல்லாம் தலைகீழா மாறிடுச்சு.." 'வேதனை'யில் புலம்பிய 'தினேஷ் கார்த்திக்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik), இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடி, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.

36 வயதாகும் தினேஷ் கார்த்திக், வயதின் காரணத்தைக் கொண்டு, மனமுடையாமல், மீண்டும் டி 20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐம்பது ஓவர் உலக கோப்பை தொடரில் ஆடிய தினேஷ் கார்த்திக், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.
மூன்று போட்டிகளில் களமிறங்கிய தினேஷ், அதில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பிறகு தான் அவருக்கு இந்திய அணியில் பெரிதும் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்நிலையில், தனது சர்வதேச பயணம் பற்றி பேசிய தினேஷ் கார்த்திக், 'இந்திய நிர்வாகம் வயதின் அடிப்படையில் ஒரு வீரரை தேர்வு செய்வதில்லை. ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற்றாலே, இந்திய அணிக்காக ஒருவர் ஆட முடியும். இந்திய அணிக்காக, டி 20 உலக கோப்பை ஆட வேண்டும் என்பதே எனது இலக்கு.
அடுத்தடுத்து, டி 20 உலக கோப்பை தொடர், இரண்டு ஆண்டுகள் நடைபெறவுள்ளதால், என்னால் முடிந்த வரை இந்திய அணியில் இடம்பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். கடந்த காலங்களில், நான் சிறப்பாக ஆடியிருந்த போதும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைத் தொடரில் நான் சிறப்பாக ஆடாத காரணத்தால், அணியில் இருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டேன்.
டி 20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், உலக கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு, எனக்கு டி 20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைப்பதில்லை' என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
