"இன்னும் 2 மாசத்துல.. அவரு பழைய 'ஃபார்ம்'க்கு வருவாரு..." எல்லாருமா 'விமர்சனம்' பண்ண 'இளம்' வீரருக்கு... தனியாளாக தோள் கொடுத்த 'தினேஷ் கார்த்திக்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்கள் அனைத்தையும், இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ள நிலையில், அனைவரும் இந்திய அணிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு நாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் களமிறங்கிய குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), மிகச் சிறப்பாக பந்து வீசவில்லை. அதிலும் குறிப்பாக, இரண்டாவது ஒரு நாள் போட்டியில், 10 ஓவர்கள் பந்து வீசி, 80 ரன்களுக்கும் அதிகமாக வாரி வழங்கினார்.
இதனால், இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றிருந்தது. நீண்ட நாட்களாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்த குல்தீப் யாதவ், கிடைத்த வாய்ப்பில் சரியாக பந்து வீசாததால், அவர் மீது அதிகமாக விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது.
பல கிரிக்கெட் பிரபலங்கள் கூட, குல்தீப் யாதவின் பந்து வீச்சை விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில், இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik), குல்தீப் யாதவிற்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் கலந்து இருக்கும். அதே போல, அனைத்து போட்டிகளும், நாம் எதிர்பார்க்கும் வகையில் இருக்காது.
அது தான் தற்போது குல்தீப்பிற்கு நிகழ்ந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, அவர் பந்து வீசியதால் தான் இந்த நிலைமை உருவாகியுள்ளது. முதல் ஐந்து ஓவர்களை இரண்டாவது ஒரு நாள் போட்டியில், அவர் சிறப்பாக வீசினார். அடுத்த 5 ஓவர்களில் தான், அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். அந்த நேரத்தில், ஸ்டோக்ஸ் சிறந்த வகையில் ஆடிக் கொண்டிருந்தார்.
அத்தகைய சூழ்நிலையில், க்ருணால் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை பந்து வீசச் சொல்லாமல், வேறு பந்து வீச்சாளர்களை கோலி பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனென்றால், இடது கை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்தை அடித்து துவம்சம் செய்யும் திறனுடையவர் ஸ்டோக்ஸ். வேறு யாராவது அந்த சமயத்தில் பந்து வீசியிருந்தால், நிச்சயம் ஸ்டோக்ஸை அவுட் செய்திருக்கலாம்' என்றார்.
மேலும், பேசிய தினேஷ் கார்த்திக், 'இனிவரும் இரண்டு மாதங்கள், குல்தீப் யாதவிற்கு மிக முக்கியமான காலகட்டமாகும். நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி, தனது திறமையை நிரூபிப்பார்' என குல்தீப்பிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்
