உருளை சமோசா, ஆனியன் சமோசா தெரியும்.. ஆனா இந்த மாதிரி சமோசா பார்த்திருக்கீங்களா? - ஆச்சரியத்தில் உணவு பிரியர்கள்.!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்நம் இந்தியா, எத்தனையோ விசித்திரம் நிறைந்த புதுமையான உணவுவகைகளையும், பதார்த்தங்களையும் பார்த்துள்ளது.

Also Read | "திரும்பவும் நடிக்க வைப்பேன்" - உதவிய VJS, சூரி, விஷ்ணு விஷால் .. ஹரி வைரவன் மனைவி உருக்கம்.! Exclusive
இந்நிலையில்தான் டெல்லியை சேர்ந்த Samosa Hub என்ற உணவகம் ஒன்று, புதிய ரக சமோசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், சமோசாவில் என்ன புதிது என்றால்? ஏற்கனவே வெங்காய சமோசா, உருளைக்கிழங்கு சமோசா மற்றும் ஆகியவை நம்மூரில் பிரபலமாக இருக்கின்றன.
இந்த வரிசையில் புதுமையாக Strawberry சமோசா, மற்றும் blueberry சமோசாகளை தயார் செய்து வழங்கி உணவு பிரியர்களுக்கு வழங்கி வருகிறது பிரபல Samosa Hub உணவகம். இந்த சமோசாக்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன.
வழக்கமாக மேற்குறிப்பிட்ட சமோசாக்களான உருளைக்கிழங்கு சமோசா மற்றும் வெங்காய சமோசா ஆகியவை முறையே உருளைக்கிழங்கு மசாலாக்கள் மற்றும் வெங்காய ஃப்ரை மசாலா கொண்டு நிரப்பப்பட்டு இருக்கும் என்றால், இந்த புதிய சமோசாக்களோ, strawberry jam-ஐ கொண்டு நிரப்பப்படுகின்றன.
Burning Spices என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த சமோசா குறித்து தகவல்கள் வெளியானது முதலே, ரெகுலர் உணவுப்பிரியர்கள் பலரும், உடனே இந்த சமோசாவை சுவைத்து பார்த்து, ஒரிஜினல் சமோசாவுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
