"திரும்பவும் நடிக்க வைப்பேன்" - உதவிய VJS, சூரி, விஷ்ணு விஷால் .. ஹரி வைரவன் மனைவி உருக்கம்.! EXCLUSIVE
முகப்பு > செய்திகள் > தமிழகம்2009-ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படம் வெண்ணிலா கபடிகுழு. விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் ஹரி வைரவனின் தற்போதைய நிலை குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் அவரது மனைவி பேசியிருந்தார்.
அதில், “வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்த என் கணவர் ஹரி திடீரென்று ஒருநாள் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். அவர் இறந்துவிட்டார் என்றே பலரும் சொன்னார்கள். ஆனாலும் நம்பிக்கையுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அப்போது மருத்துவர்கள் அவர் கோமாவில் இருப்பதாக சொன்னார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் நான் தினமும் அவருக்கு பழைய விஷயங்களை நினைவூட்டி பேசிக்கொண்டே இருப்பேன். 15 நாட்கள் கோமாவில் இருந்த அவர் மெல்ல மீண்டார். சர்க்கரை வியாதி இருந்ததால் கை, கால் வீங்கியது. அப்போதும் பலரும் அவர் பிழைப்பதே கடினம் என்றும், இப்படி நடந்தால் 6 மாதம் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று சொல்லிவிட்டார்கள்.
பின்னர் மருத்துவர்கள் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக அவரை நடக்க வைக்க முயற்சித்தோம். இப்போது அவர் கொஞ்சம் நடக்கிறார், பேசவும் செய்கிறார். இத்தனைக்கும் பிளாக் பாண்டி அண்ணா, கார்த்திக் அண்ணா, சரவணா அண்ணா உள்ளிட்ட என் கணவருடன் பணிபுரிந்த நண்பர்களும் உதவினர். எனினும் இப்போது அவருக்கு 10 நாளைக்கு ஒருமுறை 8000 ரூபாய் மருத்துவ செலவே ஆகிறது. சொந்த வீட்டை விற்று தான் இவருடைய கடனையும் மருத்துவ செலவையும் பார்த்தேன், நான் இப்போது பெட்டிக்கடை வைத்திருக்கிறேன். அதில் வரும் வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்துகிறேன், மருத்துவச் செலவையும் பார்க்கிறேன், இன்னும் 6 மாதம் மருத்துவம் செய்தால் என் கணவர் முழுமையாக குணம் அடைவார். அவர் இருந்தால் மட்டும் போதும். அவரை பார்த்துக்கொள்ள எனக்கு தெம்பு இருக்கிறது” என்று கண் கலங்கி பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தன் கணவருக்கு குவிந்த உதவிக்கரங்கள் குறித்து நம்மிடையே நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் ஹரி வைரவனின் மனைவி. அதில், “என் கணவருக்கு மருத்துவம் பார்க்க முடியாமல் இருந்த சூழலில், பிஹைண்ட்வுட்ஸில் நான் கொடுத்த நேர்காணல் மூலமாக எனக்கு நிறைய பேர் நிறைய உதவி செஞ்சுட்டு இருக்காங்க. அதுக்கு மக்களும், பிஹைண்ட்வுட்ஸ் சேனலும்தான் காரணம். அனைவருக்கும் என் நன்றிகள். குறிப்பாக விஜய் சேதுபதி அண்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ விஷ்ணு அண்ணா, சூரி அண்ணா என பலரும் உதவி செய்தார்கள். ஜாதி, மதம், இனம், மொழி கடந்து ஸ்ரீலங்காவில் இருந்தெல்லாம் போனியில் அழைத்தார்கள்.
மேலும் நிறைய பேர் போன் செய்து அழுதார்கள்.பிஹைண்ட்வுட்ஸில் இண்டர்வியூ கொடுத்ததன் பிறகு எனக்கு கிடைத்த தொகை மூலம் அவரை நல்ல நிலைமையில் குணமாக்கி மீட்டெடுப்பேன். வைரவன் நன்ன்றாகிவிடுவார் என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் நான் மீண்டும் வைரவனை படத்தில் நடிச்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நான் அதை செய்வேன். முன்பிருந்ததற்கும் இப்போதிருப்பதற்கும் என் கணவரின் உடல் அளவில் நிறையவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
Also Read | "மரணம் யார் எங்கள பிரிக்க..?" - கணவர் உயிரிழந்த பிறகு.. மனைவிக்கு நேர்ந்த துயரம்!! கலங்க வைத்த சம்பவம்..