இந்திய ஆயுஷ் நடத்தும் யோகா நிகழ்ச்சிக்கு, 100 நிறுவனங்களில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேர்வு!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Madhavan P | Apr 28, 2022 10:20 PM

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும்  மத்திய அரசு இணைந்து 2022 யோகா மஹோத்சவத்தினை உலகெங்கும் நடத்திவருகின்றன.

MAHER is one among 100 Institutions to organize Yoga by AYUSH

உலக யோகாதினத்தை முன்னிட்டு 100 நாட்கள், 100 அமைப்புகள் மற்றும் 100 இடங்கள் என பல்வேறு நாடுகளில் யோகாவின் மகத்துவத்தைப் பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் யோகா ஆசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் யோகாவை  பெருமைப்படுத்துகின்றனர்.

MAHER is one among 100 Institutions to organize Yoga by AYUSH

பொதுமக்களிடையே யோகாவில் விழிப்புணர்வை ஏற்படுத்த இதற்காக உலகெங்கும் 100 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து மட்டும் இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில்  சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் ஒன்றாகும்.

MAHER is one among 100 Institutions to organize Yoga by AYUSH

சென்னையை அடுத்துயுள்ள காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் இதற்கான யோகா திருவிழா 28-04-2022 அன்று நடைபெறுகிறது. அதில் பொது யோகா நெறிமுறை பயிற்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளம் வாயிலாக கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறை மற்றும் யோகா தொடர்பான சொற்பொழிவுகளும் தலைசிறந்த யோகிகளால் நடத்தப்படுகின்றன. கலந்து கொள்கின்ற அனைவருக்கும் கட்டணமில்லா சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட இணைய வழியின் மூலம் கலந்து கொள்ளலாம்: - https://forms.gle/kCiDpjTv11dDgJb96

இதற்கான ஏற்பாடுகளை நிகர்நிலை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மிக விமர்சையாக செய்து வருகின்றன.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

Tags : #MAHER #AYUSH #YOGA #யோகா #ஆயுஷ் #மீனாட்சிமருத்துவக்கல்லூரி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MAHER is one among 100 Institutions to organize Yoga by AYUSH | Lifestyle News.