எனக்கு நேர்ந்த 'கதி' யாருக்கும் நிகழக்கூடாது... காரணமானவர்கள் 'தண்டிக்கப்படும்' வரை நிம்மதி இல்லை... கணவனை பறிகொடுத்த பெண்ணின் 'உள்ளக் குமுறல்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Suriyaraj | Jan 13, 2020 05:00 PM
தனது கணவரை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சப்இன்ஸ்பெக்டர் வில்சனின் மனைவி உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர். வில்சனை மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பினர்.
சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை முதல்வர் பழனிசாமி வழங்கினார். வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் ரூ.1 கோடி நிதியை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
நிதியை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வில்சனின் மனைவி, தனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் ஏற்படக்கூடாது என கண்ணீர் மல்கத் தெரிவித்தார். மூத்த மகளுக்கு தகுந்த அரசு வேலை தருவதாக முதல்வர் கூறி உள்ளதாக குறிப்பிட்டார்.
