'கனவுக்கு எல்லையே இல்லை'.. நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த 'பீட்சா டெலிவரி' மேன்!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Jul 02, 2019 11:41 AM

சாதிக்கும் கனவுகளுக்கு எந்தத் தடையும், எல்லையும் இல்லை. எல்லாவற்றுக்கும் லட்சியமும், அதை அடையும் நோக்கமும், அளவில்லா உழைப்பும் இருந்தால் போதும் என்பதை மீண்டும் நிருப்பித்திருக்கிறது மொயின் கானுக்கு நிகழ்ந்த அற்புதம்.

Kashmir man turned out from Pizza waiter to PC sub-inspector

காஷ்மீரின் ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியைச் சேர்ந்தவர் மொயின் கான். 28 வயதான் இவர் மாலை 6 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை பீட்சா டெலிவரி பாயாக இருந்தவர். அதுமட்டுமல்லாமல், கார் கழுவு கடையில் 3 வருடம், ஹோட்டல் சப்ளையர், மளிகைக் கடை உதவியாளர் வேலையில் 7 வருடம் என மாறி மாறி வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்.

குடும்ப வறுமை காரணமாக இத்தனை பணிகளைப் பார்த்தாலும், என்றேனும் ஒருநாள் சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற எண்னம்தான் மொயின் கானின் உள்ளிருந்து அவரை இயக்கி வந்துள்ளது என்பதற்கு அடையாளமாய் தற்போது அவர் அடைந்திருக்கும் வெற்றி நிரூபித்திருக்கிறது.

ஜம்முவின் நர்கோட்டா மாவட்டத்தில் உள்ள தண்டாபானி என்கிற கிராமத்தில் கல்வி பயிலாத குடும்பத்தில் பிறந்த முதல் பட்டதாரியான மொயின் கானின் அண்ணன் டவுன் சிண்ட்ரோம் என்கிற நோயால் பாதிக்கப்பட்டவர்; தந்தை பால் விற்பவர். இந்த வறுமையிலும் கடுமையாக படித்து, நண்பர்களின் உதவியுடன் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து தேர்வெழுதி, தேர்வானார். தற்போது உதாம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்று வருகிறார்.

Tags : #INDIA #KASHMIR #JAMMU #MOIN KHAN