நெக்ஸ்ட் 'டார்கெட்' இதுதான்'... பிரபல 'டெலிவரி' நிறுவனம் அதிரடி... எக்கச்சக்க 'ஆபர்கள்' கன்பார்ம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்உண்வு டெலிவரி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் சொமாட்டோ நிறுவனம் அடுத்ததாக கிரெடிட் கார்டு துறையில் கால் பதிக்கவிருக்கிறது. ஆமாம். சொமாட்டோ நிறுவனம் ஆர்பிஎல் வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டு வழங்கும் முறையைத் தொடங்கவிருக்கிறது.

ஆர்பிஎல் வங்கியின் இந்த கிரெடிட் கார்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து உள்நாட்டு விமான நிலையங்களிலும், காத்திருப்பு முறை இலவசமாக வழங்கப்படும். எடிஷன் கார்டு என பெயரிடப்பட்டு உள்ள இந்த கார்டு சொமாட்டோ வாடிக்கையாளர்களுக்கு எக்கச்சக்க சலுகைகளை வழங்கவும் திட்டமிட்டு இருக்கிறது.
சொமாட்டோ ஆப் வழியாக ஒவ்வொரு முறை நீங்கள் உணவு ஆர்டர் செய்யும் போது 10% கேஷ்பேக் ஆபர் உங்களுக்கு கிடைக்கும். கூடுதலாக ஆன்லைன் வழி பணப்பரிமாற்றம் என்றால் 2 சதவிகித எடிஷன் கேஷ் உங்களுக்குக் கிடைக்கும். 200 எடிசன் புள்ளிகள் பெற்றதும் அதை 200 ரூபாயாக நீங்கள் செலவழித்துக் கொள்ளலாம். ஆர்பிஎல் வங்கியின் கீழ் இந்தியா 25 லட்சம் கிரெடிட் கார்டு பயனாளர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
