திரைப்பட பாணியில் திடீரென திகில் கிளப்பிய காளை.. அலறியடித்து ஓடிய மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | Apr 25, 2019 04:36 PM
திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவைக் காட்சியில் காளை ஒன்று படப்பிடிப்பின் போது மிரண்டு அங்கு கூடி இருக்கும் மக்களைப் பந்தாடும். டெல்லியில் இதே போன்ற சம்பவம் ஒன்று நிஜமாகவே நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு கோயில் நிகழ்ச்சியில் காளை மீது, சிவன் வேடமிட்டபடி வந்தவரை, அங்கு கூடியிருந்த மக்கள் பக்திப் பரவசத்துடன் அருகில் சென்று வணங்கினர். இந்நிலையில், அதிகமான மக்கள் கூட்டம் மற்றும் அதிக சத்ததுடன் பாடல் ஒலித்ததால் காளை தீடீரென மிரண்டது.
அப்போது, தன் மீது சிவன் வேடமிட்டு அமர்ந்திருந்த அந்த நபரை, காளை தூக்கி வீசியது. மேலும் தன்னை சுற்றி கூட்டமாக அமர்ந்திருந்த மக்களையும் சரமாரியாக தாக்கியது. இந்தச் சம்பவத்தில் 2 வயது குழந்தை உள்பட 8-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.