'இந்தியாவில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு'... 'பிரபல நிறுவனம் அறிவிப்பு'... 'பின்னடைவிலிருந்து வளர்ச்சிக்கு திரும்ப நடவடிக்கை!...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 06, 2020 11:29 AM

இந்தியாவில் இன்ஜினியர்களுக்கு வேலை கொடுப்பதாக ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Uber To Hire Engineers In India For Expanding Tech Product Teams

அமெரிக்காவின் மிகப்பெரிய டாக்ஸி போக்குவரத்து சேவை நிறுவனமான ஊபர் இந்தியாவிலும் சேவை வழங்கி வரும் நிலையில், இங்கு தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டி அந்நிறுவனம் முதலீடும் செய்து வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கால் டாக்ஸி சேவையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் வளர்ச்சி பாதைக்குத் திரும்பும் நடவடிக்கையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஊபர்  தனது தொழில்நுட்பப் பிரிவில் ஆள் பலத்தை அதிகரிக்க முடிவுசெய்துள்ளது. அதற்காக பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மொத்தம் 140 பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களை ஊபர் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவில் இணைக்க ஊபர் முடிவுசெய்துள்ளது. இந்தியாவில் டாக்ஸி போக்குவரத்துச் சேவையை விரிவுபடுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் தற்போது டாக்ஸி போக்குவரத்து சேவைகள் பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்டுவரும் நிலையில், பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்கவும், டிஜிட்டல் சார்ந்த பரிவர்த்தனைகளை அதிகமாக ஊக்குவிக்கவும் ஊபர் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இந்தக் குழுவில்தான் தற்போது இந்தியாவிலிருந்து புதிய பொறியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Uber To Hire Engineers In India For Expanding Tech Product Teams | India News.