ஊருக்கெல்லாம் வேலை தேடி 'தந்தவங்களுக்கே' இப்படி ஒரு நெலமையா?... நூற்றுக்கணக்கான ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா காரணமாக உலகம் முழுவதும் வேலையில்லா சூழல் அதிகமாகி வருகிறது. ஊரடங்கால் நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் மேலும் பலரின் வேலைகள் பறிபோகலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த நிலையில் பிரபல நிறுவனமான லிங்க்ட் இன் 960 ஊழியர்களை உலகம் முழுவதும் பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவிலும் மும்பை, குர்ஹான் மற்றும் பெங்களூர் என 3 கிளைகள் உள்ளதால் இந்திய ஊழியர்களும் இந்த வேலைநீக்க பட்டியலில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து லிங்க்ட் இன் தலைமை அதிகாரி ரோஸ்லான்ஸ்கி, கொரோனா தொற்றுநோயால் எங்களது ஊழியர்களில் 6% அல்லது 960 ஊழியர்கள் உலகம் முழுவதும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கடினமான முடிவை எடுத்து இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.