“கொரோனா பரவுனதே இப்படி ஒரு சம்பவத்துனாலதான்!”.. சூப் சாப்பிடும்போது ஷாக் ஆன குடும்பம்.. பதறிப்போய் எடுத்த திடீர் முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் உள்ள ஹூபெய் மாகாணத்தில் வசித்து வரும் என்கிற குடும்பத்தினர், கடந்த 10-ஆம் தேதி சீனா ரெஸ்ட்ரோடண்ட் ஒன்றில் பன்றி இறைச்சி சூப் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

சூப் வந்ததும், சென்னின் அம்மா சூப் டப்பாவை திறந்து பார்க்க, அப்போது கருப்பாக ஒரு பொருள் இருக்க, நறுமணத்துக்காக சேர்க்கப்பட்ட வாசனை பொருட்களாக இருக்கலாம் என்று முதலில் நினைத்து அனைவரும் சூப்பை குடிக்கத் தொடங்கினர். பாதி சூப்பை குடித்த பின்னர் சென்னின் அம்மாவுக்கு சந்தேகம் வலுக்க, இதனால் ஒரு குச்சியை எடுத்து அது என்ன என பார்க்க, அது செத்துப்போன வவ்வால் என தெரியவந்தது.
இறகு மற்றும் காதுகளுடன் இருந்த அந்த வவ்வாலை பார்த்ததும அதிர்ச்சியில் உறைந்த அவர்கள் உள்ளூர் டிவி சேனலுக்கு தகவல் கொடுத்ததுடன், புகைப்படத்தையும் கொடுத்தனர். பின்னர் சூப்பிற்கான பணத்தை ரெஸ்டோரண்ட்டில் சென்னின் குடும்பத்தினரிடம் கேட்டபோது, உள்ளூர் உணவு தயாரிக்கும் நிறுவனத்திடம்தான் தாங்கள் சூப் கொள்முதல் செய்ததாக தெரிவித்தனர். ஆனால் அந்த நிறுவனமோ தங்கள் தரப்பில் இந்த தவறு நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அக்குடும்பத்தினர், இப்படி ஒரு உயிரியால்தான் கொரோனா பரவியதாக செய்திகள் வந்ததை அடுத்து, தாங்களும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர்.

மற்ற செய்திகள்
