'டாய்லெட்ல மகளோட நிலைய கண்டதும்...' 'அம்மாவோட உயிர் போயிடுச்சு...' 'புதுமனை புகுவிழாவில் நடந்த...' நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுமனை புகுவிழாவிற்கு வந்த மகளை பறிகொடுத்த தாய் அந்த இடத்திலேயே அவரும் மாரடைப்பால் இறந்த செய்தி ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரலட்சுமி மற்றும் வெங்கடேஸ்வரா தம்பதியினர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தேவரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சரிதா என்ற மகளும் இருந்துள்ளார். சொந்த வீடு கட்டி அதில் தங்களின் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற வரலட்சுமி மற்றும் வெங்கடேஸ்வரா அவர்களின் பல கால கனவு நேற்று நிறைவேறியுள்ளது.
திருமணமான மகளும் தனது பெற்றோரின் கனவில் ஒரு அங்கமாக திகழ தாய் வீட்டிற்கு வந்துள்ளார். வீடு புகும் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் அப்பா அம்மாவுடன் இரவு அங்கேயே தங்க முடிவுசெய்துள்ளார் சரிதா.
சரிதா எப்போதும் போல் காலை எழுந்து காலை காலைக்கடன் முடிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் ரொம்ப நேரம் ஆகியும் சரிதா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கழிவறையின் கதவை தட்டி கூப்பிட்டுள்ளனர். ஆனால் ஒரு சிறு சத்தம் கூட வரவில்லை.
கழிவறை உள்ளே மூடப்பட்டிருந்ததால் பதற்றமடைந்த உறவினர்கள் கதவை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கதவை உடைத்து பார்த்தபோது சரிதா நிலை குலைந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். மகளின் நிலையை கண்ட சரிதாவின் அம்மா வரலட்சுமி அதிர்ச்சியில் மூச்சடைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உடனே இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் சரிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் கனவில் பங்குகொள்ள வந்த மகளும், மகளின் நிலையை கண்ட அம்மாவும் இறந்த செய்தி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
