"திரும்ப என்னோட நீ வரணும்"... ஒரு மாதத்திற்கு பின் 'சுஷாந்த் சிங்' மரணம் குறித்து.... 'முன்னாள்' காதலியின் உருக்கமான 'பதிவு'!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணமடைந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் அவரது முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி முத்த முறையாக தனது மவுனத்தை கலைத்து அவரது மரணம் குறித்து இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

ரியா சக்ரபோர்த்தி, நீளமான பதிவு ஒன்றுடன் சுஷாந்த் சிங்குடன் தான் இருந்த புகைப்படங்களையும் முதன் முறையாக வெளியிட்டுள்ளார். 'எனக்கு அன்பின் மீது நம்பிக்கை வர காரணம் நீங்கள் தான். அன்பின் ஆற்றலையும் உணர வைத்தது நீங்கள் தான். நீங்கள் இப்போது மிகவும் அமைதியான இடத்தில் இருக்குறீர்கள் என எனக்கு தெரியும். அதே போல, இந்த உலகம் கண்ட சிறந்த அதிசயம் நீங்கள் தான். அத்தனை சிறந்த மனிதர். உங்களை பிரிந்து 30 நாட்கள் ஆகிறது. ஆனால், எனது வாழ்நாள் முழுவதும் உங்களை நேசித்து கொண்டே இருப்பேன்' என சுஷாந்த் சிங் மீதான தனது அன்பை அந்த பதிவில் வெளிப்படுத்தியிருந்தார்.
ரியாவின் பதிவிற்கு பல பாலிவுட் பிரபலங்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், நெட்டிசன்கள் பலரும் இந்த பதிவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக, சுஷாந்த் சிங் மரணம் மிகப்பெரும் சர்ச்சையையும், சந்தேகத்தையும் கிளப்பிய நிலையில் அவரது மரணம் தொடர்பாக சுஷாந்த் நண்பர்கள் மற்றும் பாலிவுட் சினிமா துறையினை சேர்ந்த பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரது மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்ரபோர்த்தியிடமும் சுமார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
