'சுஷாந்த் சிங்' மரணம் தொடர்பா... நடிகையிடம் '7' மணி நேரம் நடந்த விசாரணை... அடுத்ததா இந்த 'இயக்குனர' விசாரிக்க போறாங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சினிமாத்துறையை சேர்ந்த பலரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்த் நண்பர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சுஷாந்த் சிங் நடிப்பில் கடைசி படமான 'தில் பெச்சாரா' திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா சாங்கியிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
சுமார் 7 மணி நேரம் அவரிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்ட நிலையில், அவரது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து கொண்டனர். முன்னதாக, சுஷாந்த் சிங் மரணத்தின் போது மிகவும் உருக்கமான பதிவுகளை நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
நடிகை சஞ்சனாவிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து அடுத்ததாக நடிகரும், இயக்குனருமான சேகர் கபூரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். YRF பிலிம்ஸ் தயாரிப்பில் சுஷாந்த் சிங்கை வைத்து சேகர் கபூர் திரைப்படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது. மேலும், சுஷாந்த் சிங் மரணத்தின் போதும், சேகர் கபூர் உடைந்து போன நிலையில், அவர்கள் கூட்டணியில் வராமல் போன திரைப்படம் குறித்து உருகினார்.
YRF தயாரிப்பில் சுஷாந்த் சிங் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதாகவும், அதில் 2 படங்கள் வெளியான நிலையில், மூன்றாவது படத்தை சேகர் கபூர் இயக்க இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தில் இருந்து பின் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தான் சேகர் கபூர் இயக்குவதாக இருந்தது.
மேலும், சுஷாந்த் சிங்கிற்கு வரும் பட வாய்ப்புகளை பாலிவுட்டில் சிலர் தடுத்ததாகவும், அதன் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் எனவும் பரவலான தகவல் இருக்கும் நிலையில் பலரிடம் தொடர்ந்து விசார்ணையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
