'சுஷாந்த் சிங்' மரணம் குறித்து... ரோகினி ஐயரிடம் நடந்த விசாரணை... 'அவரோட' 3 ஃப்ரெண்ட்ஸ்ல நானும் 'ஒருத்தி'ங்கிறது... உருக்கமான 'பதிவு'!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் முன்னாள் காதலியிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், அடுத்ததாக அவரது தோழியான ரோகினி ஐயரிடம் சுஷாந்த் சிங் மரணம் குறித்து நேற்று காலை விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் ரோகினியின் வாக்குமூலம் குறித்து போலீசார் அல்லது ரோகினியோ தகவல் எதுவும் வெளியிடவில்லை. முன்னதாக ரோகினி ஐயர், சுஷாந்த் சிங் மரணம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நீள பதிவு ஒன்றை இட்டுள்ளார். 'இதை நான் சொல்ல வேண்டும். என்னுடைய சிறந்த நண்பர் இப்போது இல்லை. அதை ஏற்றுக்கொள்ள இன்னும் என்னால் முடியவில்லை. முதலில் சுஷாந்த் தன்னுடைய புகழ் மற்றும் தன்னை குறித்த மற்றவர்களின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதே போல தனக்கு நெருக்கமானவர்கள் தவிர மற்றவர்கள் எழுதும் பதிவையும் அவர் கண்டு கொள்வதில்லை. போலி நண்பர்கள், சிறிய போன் கால்கள் எல்லாம் அவருக்கு பிடிக்காது. மற்றவர்களை போல பார்ட்டி எதுவும் சுஷாந்த்துக்கு தேவைப்படவில்லை. அவருக்கென தனி ராஜ்யத்தை அமைத்துக் கொண்டார். சினிமாத்துறை என்பது அவரது வாழ்வில் ஒரு சிறிய பங்கு தான். அத்தனை தாண்டி அவரது உலகத்தில் இன்னும் பெரும்பகுதி உள்ளது. அவர் விருதுகள் பற்றி கவலைப்பட்டதில்லை. அதே போல 100 கோடி படம் கொடுக்க வேண்டும் எனவும் ஆசைப்பட்டதில்லை. அவர் தொண்டு நிறுவனங்களில், அறிவியல் திட்டங்கள் மற்றும் உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்ட புதுமைகளில் முதலீடு செய்தார். எனவே தயவுசெய்து அவரைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள் அல்லது உங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்ய அவரது திறமையைக் குறைக்க வேண்டாம்' என குறிப்பிட்டுள்ளார்.
அதே போல இன்னொரு பதிவில், 'நீங்கள் அவரைக் கொண்டாட விரும்பினால் அவரது வாழ்க்கையை கொண்டாடுங்கள். அவர் வைரம் போன்றவர். அவர் அக்கறை கொண்ட மூன்று நண்பர்களில் நானும் ஒருவர் என்பதில் எப்போது நான் நன்றிக்கடன் பட்டிருப்பேன். அவரை பற்றி யாருக்கும் சரியாக தெரியவில்லை' என்பது உட்பட இன்னும் நீள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
