'சுஷாந்த் சிங்' மரண விவகாரம் : "நான் உண்டு என் வேல உண்டுன்னு இருக்கேன்"... 'தேவை'யில்லாம என்ன இழுத்து 'அரசியல்' பண்றாங்க... வேதனையில் முதலமைச்சர் 'மகன்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் சரிவர தெரியவில்லை.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சுஷாந்த் சிங் தந்தை கே. கே. சிங், சுஷாந்த் சிங் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி உட்பட ஆறு பேர் மீது பீகார் போலீஸ் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இதிலிருந்து சுஷாந்த் சிங் மரண விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு இடையே இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பாக மோதல் வெடித்தது.
பீகார் அரசு சார்பில் சிபிஐ விசாரணை கோரப்பட்ட நிலையில், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. விரைவில் சிபிஐ விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையியல், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தன் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும், மந்திரியுமான ஆதித்யா தாக்கரே வேதனையடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'நான் பால் தாக்கரே பேரன். மகாராஷ்டிரா, சிவ சேனா, தாக்கரே குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலையும் நான் ஒரு போதும் செய்யமாட்டேன். என் மீது பழி போடுவது என்பது மிகவும் மலிவான அரசியல். மகாராஷ்டிரா அரசு கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. எங்களின் வெற்றியை ஒரு சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை' என்றார்.
மேலும், 'சுஷாந்த் சிங் மரணத்தை சிலர் அரசியல் ஆக பார்க்கிறார்கள். பாலிவுட் துறையை சேர்ந்த சிலருடன் எனக்கு தனிப்பட்ட பழக்கம் உள்ளது. இது குற்றம் அல்ல. மும்பை என்பது சினிமா உலகத்தின் ஒரு பகுதி' என தெரிவித்துள்ளார்.