கொரோனா தடுப்பூசி ‘வெவ்வேறு’ டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் அச்சம்..? இந்தியாவின் கோவிட்-19 தலைமை ஆலோசகர் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பூசிகளை வெவ்வேறு டோஸ்களாக செலுத்திக்கொண்டவர்கள் கவலைப்பட தேவையில்லை என இந்திய அரசின் தலைமை கோவிட் 19 ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
![What happens if you mix Covishield and Covaxin doses? What happens if you mix Covishield and Covaxin doses?](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/what-happens-if-you-mix-covishield-and-covaxin-doses.jpg)
உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்திலுள்ள பத்னி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசியை முதல் டோஸ் செலுத்திக்கொண்டனர். இதன் பிறகு, அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது டோஸ்க்கு செலுத்தப்பட்டது. இதனால் ஏதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுமா என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதனை அடுத்து இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர்கள் பாதுகாப்பாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சித்தார்த் நகர் மருத்துவ தலைமை அதிகாரி சந்தீப் சவுத்ரி கூறுகையில், ‘தடுப்பூசிகளை கலவையாக செலுத்துவது குறித்து இந்திய அரசிடமிருந்து வழிகாட்டுதல்கள் எதுவும் வரவில்லை. இது அலட்சியம் காரணமாக நடந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தடுப்பூசியை முதல் டோஸாக பெறுபவர், அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் பெற வேண்டும். தடுப்பூசி டோஸ்கள் மாற்றி போடப்பட்டது பற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் கூறினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் கோவிட்-19 தலைமை ஆலோசகர் டாக்டர் வி.கே.பால் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘மக்கள் முதல் டோஸாக எந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்களோ அதே தடுப்பூசியைத்தான் இரண்டாவது டோஸாகவும் செலுத்திக்கொள்ள வேண்டும். இருப்பினும், மக்களுக்கு வெவ்வேறு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தால் கவலைப்பட தேவையில்லை’ என டாக்டர் வி.கே.பால் விளக்கமளித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)