இந்தியாவுலயே முதல் தடவை METAVERSE-ல ஓவிய கண்காட்சி நடத்தும் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி..முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இந்தியாவிலேயே முதன் முறையாக மெட்டாவேர்ஸ் எனப்படும் மெய்நிகர் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலமாக ஓவிய கண்காட்சியை நடத்தி வருகிறது.
மெட்டாவேர்ஸ்
தகவல் தொழில்நுட்ப உலகில் ஏற்பட்ட புரட்சியின் பலனாக உலகத்தின் எந்த மூலையில் இருப்பவரோடும் நம்மால் இப்போது நினைத்த நேரத்தில் பார்க்க/பேச முடியும். ஒரு கட்டத்தில் கடிதத்தை நம்பி இருந்த மனித குலம் இப்போது வேறு கண்டத்தில் இருப்பவரோடு முகம் பார்த்து பேசிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் அடுத்த கட்டம் தான் இந்த மெட்டாவேர்ஸ். Meta universe என்ற வார்த்தைகளை இணைத்து உருவானது தான் metaverse .
சுருக்கமாக சொல்வதென்றால் இதன்மூலம் நமக்கான டிஜிட்டல் உடலை நாமே உருவாக்கி நமக்கான உலகத்தில் உலவ விடலாம். இதில் ஒரு ஓவிய கண்காட்சியையே நடத்தி வருகிறது புதுச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி.
போட்டி
மெட்டவேர்ஸ்-ல் நடைபெறும் இந்த ஓவிய கண்காட்சிக்காக முதலில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் 350 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். படைப்பூக்கத்துடனும் மாற்று அறிவியல் சிந்தனை உடனும் இந்த மாணவர்கள் படைத்த ஓவியங்களில் சிறந்தவை மட்டும் தேர்வு செய்யப்பட்டன.
அப்படி மாணவர்களின் படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் இந்த மெய்நிகர் ஓவிய கண்காட்சியில் (Metaverse Drawing Exhibition) பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்டவேர்ஸ்-ல் ஒரு ஓவிய கண்காட்சியை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நடத்தி வருவது பல தொழில்நுட்ப காதலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.