கல்குவாரியில் வெடி வெடித்தபோது நடந்த விபரீதம்.. உருண்டு விழுந்த பாறைகள்.. பதபதைப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்குவாரியில் பாறைகள் உருண்டு விழுந்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Several workers feared trapped in stone quarry collapse in Karnataka Several workers feared trapped in stone quarry collapse in Karnataka](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/several-workers-feared-trapped-in-stone-quarry-collapse-in-karnataka-1-1.jpg)
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் மாவட்டத்தில் கல்குவாரி பணிகள் நடைபெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த ஹகீம் என்பவர் அரசின் அனுமதி பெற்று குத்தகையின் அடிப்படையில் இந்த கல்குவாரியை நடத்தி வருகிறார். இந்த கல்குவாரியில் தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை செய்து வருகின்றனர்.
கல்குவாரியில் பாறைகளுக்கு வெடி வைத்து கற்களாக மாற்றி பொக்லைன் எந்திரங்களின் மூலம் லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றும் கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படும் பணி நடைபெற்று வந்தது. அப்போது வெடி வெடித்ததின் அதிர்வால் குன்றின் மேலிருந்த பெரிய பாறை எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது.
இதனால் கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாறையின் அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 5-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பாறை அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)