அங்க அடிச்சா இங்க வலிக்கும்.. உலகையே அதிர வைத்துள்ள ரஷ்யா - உக்ரைன் போர்.. ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை
முகப்பு > செய்திகள் > வணிகம்சென்னை: ரஷ்யா உக்ரைன் போரின் விளைவாக தங்கம் விலை இன்று கிடுகிடுவென ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாரவது எங்கள காப்பாத்துங்க.. ரஷ்யாவுடன் போர் தொடங்கியுள்ள நிலையில் வேண்டுகோள் விடுத்த உக்ரைன்
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய சோவியத் யூனியன் நாடுகளில் ஒன்றாக இருந்த உக்ரைன் விரும்பியது. ஆனால், அதன் அண்டை நாடான ரஷ்யா சோவியத் யூனியன் கலைவதற்கு காரணமாக இருந்த நேட்டோ அமைப்புடன் உக்ரைன் சேர்வது பிடிக்கவில்லை என பலமுறை எச்சரிக்கைவிதித்தது
உக்ரைன் அதை சிறிதும் பொருட்படுத்தாத நிலையில் இந்த விஷயம் தற்போது ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையே போராக வந்து நின்றுள்ளது. அமெரிக்கா எப்போதும் போல நேட்டோ நாடுகள் கூட்டமைப்பு மூலம் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் வேலையை செய்து வருகிறது.
உக்ரைனில் எமெர்ஜென்சி:
உக்ரைனில் இன்று எமெர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இன்று பேர் தொடங்கியுள்ளது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகளளும் சரிந்து வருகின்றன.
இதன் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதனால் இப்போது இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை:
ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.108 உயர்ந்து சுமார் ரூ.4827- க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு ரூ.864 உயர்ந்து ரூ. 38616-க்கு விற்பனையாகி வருகிறது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 41,544 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலை ரூ.1.90 உயர்ந்து ரூ.70.60-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 70,600 ஆக உள்ளது.
